சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்?: வித்யாசாகர் ராவ் விளக்கம்

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்?: வித்யாசாகர் ராவ் விளக்கம்
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்?: வித்யாசாகர் ராவ் விளக்கம்
Published on


தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தபோது பெற்ற அனுபவங்களாக வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் தனது ஓராண்டு தமிழக ஆளுநர் பதவிக்காலம் குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். அதை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் உள்ள நிலையில், ஆறாவது அத்தியாயத்தில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காத சூழ்நிலை பற்றி வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

‘சட்டத்தை நிலைநிறுத்தியது’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த அத்தியாயத்தில், சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியதை கையாண்ட விதம் குறித்து வித்யாசாகர் ராவ் விவரித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில், அடுத்தவரை ஆட்சி அமைக்க இயலாத நெருக்கடியான சூழலில் அரசியல் சாசனப்படி செயல்பட்டதாகவும் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com