வீடியோ வெளியீடு சசிகலா குடும்பத்தின் சதி: ஜெயக்குமார் காட்டம்!

வீடியோ வெளியீடு சசிகலா குடும்பத்தின் சதி: ஜெயக்குமார் காட்டம்!

வீடியோ வெளியீடு சசிகலா குடும்பத்தின் சதி: ஜெயக்குமார் காட்டம்!
Published on

ஜெயலலிதாவின் புகழை சீர்குலைக்க சசிகலா குடும்பத்தால் செய்யப்பட்ட சதியே இந்த வீடியோ வெளியீடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் வீடியோ வெளியாகியிருக்கிறது. உள்நோக்கத்தோடு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை எடுத்தது யார்? வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரமும் இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் கொண்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறல். எனவே வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையப்படுத்தி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுள்ளதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். விசாரணை ஆணையத்திடம் வீடியோவை அளிக்காதது ஏன் ‌எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் பெரும் புகழை சீர்குலைக்க சசிகலா குடும்பத்தால் செய்யப்பட்ட சதியே இந்த வீடியோ என்றும், சசிகலா குடும்பத்தின் சதியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மீறி வீடியோ எப்படி எடுக்க முடியும்? வீடியோவை எடுத்தது யார்? அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதுதான் வீடியோ எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது” என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com