கேகேஆர் பயிற்சியாளர் மெக்கலமுடன் ஷ்ரேயாஸ் ஐயர் வாக்குவாதம்: ஏன்? எதற்கு?

கேகேஆர் பயிற்சியாளர் மெக்கலமுடன் ஷ்ரேயாஸ் ஐயர் வாக்குவாதம்: ஏன்? எதற்கு?
கேகேஆர் பயிற்சியாளர் மெக்கலமுடன்  ஷ்ரேயாஸ் ஐயர் வாக்குவாதம்: ஏன்? எதற்கு?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்த நிலையில், போட்டியின் போது பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்துடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.


ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அபாரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோரான 217 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆரோன் பிஞ்ச் ஜோடி அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசியதால், ராஜஸ்தானின் வேகத்தை விட அதிவேகத்தில் கொல்கத்தாவின் ஸ்கோர் உயர்ந்தது.

சாஹல் மாயச்சுழலில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 51 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட்டாக கொல்கத்தா தடுமாறத் துவங்கியது. கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஒபேத் மெக்காய் வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் ஜாக்சன், 4ஆவது பந்தில் உமேஷ் யாதவ் ஆட்டமிழக்க 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது. சாஹல் தன் மாயாஜால சுழலால் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் சதம், ஒரே வீரர் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்களை கைப்பற்றிய சாதனை இப்போட்டியில் நடந்தேறியது.

ஸ்ரேயாஸ் அய்யர் அவுட்டாகி பெவிலியன் திரும்பும்போது டக்அவுட்டில் அமர்ந்திருந்த தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலத்திடம் ஏதோ குறை கூறிக் கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் தனது பேட் மற்றும் ஹெல்மெட்டை கைகளில் வைத்து மைதானத்தில் சில அதிரடி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியாக பேசிக் கொண்டிருந்தார்.புரிந்துகொள்ளத்தக்க வகையில் பயிற்சியாளர் மெக்கல்லம் அந்த நேரத்தில் எதுவும் சொல்லவில்லை, அத்தகைய நெருக்கமான ஆட்டத்தை இழந்த பிறகு ஸ்ரேயாஸ் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். இந்த வாக்குவாத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com