கிளையில் ஓய்வெடுத்த பாம்பு.. கச்சிதமாக தலையை தாவிப்பிடித்த கீரிப்பிள்ளை: த்ரில் வீடியோ

கிளையில் ஓய்வெடுத்த பாம்பு.. கச்சிதமாக தலையை தாவிப்பிடித்த கீரிப்பிள்ளை: த்ரில் வீடியோ
கிளையில் ஓய்வெடுத்த பாம்பு.. கச்சிதமாக தலையை தாவிப்பிடித்த கீரிப்பிள்ளை: த்ரில் வீடியோ

கீரிப்பிள்ளை மற்றும் பாம்புக்கு இடையில் நடக்கும் மற்றொரு சண்டைதான் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வைரல். இந்த வீடியோவில் கீரிப்பிள்ளை அச்சமில்லாமல் கிளையில் பாய்ந்து பாம்பின் தலையை லாவகமாக பிடிக்கிறது. இக்காணொலியை மகாராஷ்டிராவின் மேற்கு நாசிக் பிரிவின் துணை வனபாதுகாவலர் அலுவலகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

விஷமுள்ள பாம்புகளை, குறிப்பாக கோப்ராக்களை எதிர்த்துப் சண்டையிடுவதிலும் மற்றும் கொல்வதிலும் திறன் மிக்கது கீரிப்பிள்ளை. தற்போது வெளிவந்துள்ள 45 வினாடி குறுகிய வீடியோ கிளிப்பில்,  மரத்தின் குறைந்த உயரத்தில் தொங்கும் கிளைகளில் ஒரு பாம்பு ஓய்வெடுப்பதைக் காணலாம். அதன் அமைதியான ஓய்வில் ஒரு கீரிப்பிள்ளை குறுக்கிடுகிறது, அந்த கீரிப்பிள்ளை அமைதியாக உறங்கும் பாம்பின் தலைப்பகுதியை குறிவைத்து லாவகமாக கவ்வுகிறது, அதன்பிறகு கிளையிலிலிருந்து பாம்பினை தரையில் இழுத்து தள்ளுகிறது கீரி. பாம்பின் தலையை லாவகமாக பிடித்துள்ள காரணத்தால், பாம்பினால் கீரியுடன் எதிர்த்து சண்டையிட முடியவில்லை. இதனால் பாம்பை வீழ்த்துவதில் கீரிப்பிள்ளை வெற்றிகரமாக உள்ளது, பின்னர் கீரி, அந்த பாம்பை உறுதியாகப் பிடித்துக் கொண்டு இழுத்துசெல்வது தெரிகிறது.

விஷமுள்ள பாம்புகளை எதிர்த்து கீரி துணிவுடன் போராடும்போது அவற்றின் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகள், அவற்றை விஷத்திலிருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. டி.சி.எஃப் வெஸ்ட் நாசிக் இந்த வீடியோவை இன்று காலை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டபோது, "மிகச்சிறந்த உயிர்வாழ்வதற்கு" ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டினார். "சிறிய உயிரினம், தைரியமான உறுதி" என்று எழுதியுள்ளார். இதேபோல கடந்த மாதம், இந்திய வன சேவை அதிகாரி டாக்டர் அப்துல் கயூம் ஒரு சாலையின் நடுவில் ஒரு பாம்பு மற்றும் கீரி சண்டையிடும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com