\
பாஜக எனது தாய்: வெங்கய்யா நாயுடு உருக்கம்

பாஜக எனது தாய்: வெங்கய்யா நாயுடு உருக்கம்

பாஜக எனது தாய்: வெங்கய்யா நாயுடு உருக்கம்
Published on

சிறு வயதில் தாயை இழந்த தன்னை, பாரதிய ஜனதா கட்சி தான் தாயாக இருந்து இந்த அளவு வளர்த்திருக்கிறது என வெங்கய்யா நாயுடு உருக்கமாக பேசினார்.

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கய்யா நாயுடு இன்று டெல்லியில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு, தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு பாஜகவும், மக்களும்தான் காரணம் என கண்ணீர் மல்க கூறினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்துள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கௌரவமாகக் கருதுகிறேன். நாடாளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com