\
சி.எம்.சி எடுத்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்: சீமான்

சி.எம்.சி எடுத்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்: சீமான்

சி.எம்.சி எடுத்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்: சீமான்
Published on

நீட் விவகாரத்தில் சி.எம்.சி எடுத்த முடிவையே தமிழக அரசும் எடுத்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை காப்பாற்ற போராடுவதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இயலாது என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாகவும் வேலூர் சி.எம்.சி கல்லூரி நேற்று அறிவித்தது. இதனை சுட்டிக்காட்டி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வரை மருத்துவக் கல்லூரிகளை மூடுவதாக தமிழக அரசும், சி.எம்.சி போன்று அறிவித்திருக்க வேண்டும் என்று சீமான் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மக்கள் பணத்தில் ஆட்சி நடத்தும் அரசு, மக்களுக்காக செயல்படுவதில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com