டிரெண்டிங்
வேலூர் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது திமுக
வேலூர் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது திமுக
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற 16 முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக திமுக நியமித்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 60க்கும் அதிகமானவர்களை பொறுப்பாளர்களாக திமுக நியமித்துள்ளது. பொன்முடி, ஜெ.அன்பழகன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செந்தில்பாலாஜி. கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.