வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி : மேலும் பலருக்கு பொறுப்புகள்
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி தமிழக பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் மாநில அளவிலான பொறுப்புகள் நியமனத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். அதன்படி, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணித் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே.சுரேஷ் மாநில ஓ.பி.சி பிரிவு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ளனர். அத்துடன் நடிகர் ராதா ரவி, விஜய்குமார், கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மாநில பிற மொழி பிரிவு துணைத் தலைவராக தீப்தி சங்கவி, பிறமொழிப்பிரிவு மாநில செயலாளர்களாக அங்கிட் அகர்வால், ஜித்தேந்திரன், கிருஷ்ணா நத்தாணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.