தமிழக அரசு, பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் அரசு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
புதுவை திராவிடர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே சமூக நீதி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு புதுவை மாநில தி.க.தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால், நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வு செல்லாது என அறிவித்து விட்டு ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என கூறினார். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு, பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் அரசு என்று தெரிவித்தார்.