டிரெண்டிங்
மாணவர்களிடையே மதவாதத்தைப் பரப்பும் பாஜக: திருமாவளவன் குற்றச்சாட்டு
மாணவர்களிடையே மதவாதத்தைப் பரப்பும் பாஜக: திருமாவளவன் குற்றச்சாட்டு
மாணவர்களிடையே மதவாத கருத்துகளை பாஜக பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் அரசியல் செய்வதைத் தாண்டி, கல்லூரி வளாகங்களில் புகுந்து மாணவர்களிடையே வெறுப்பு அரசியலைப் பரப்பி வருவது சமூகத்துக்கும், நாட்டுக்கும் தீமை விளைவிக்கும் என்று தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா குறித்து பேசிய திருமாவளவன், சட்டமன்றத்திலும், முதலமைச்சராகவும் அவர் செய்த சாதனைகளை தேசிய தலைவர்கள் பேசாதது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார்.