ஆந்திராவில் போட்டியிடுகிறது விசிக: திருமாவளவன்
நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆந்திராவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவித்தார். மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமில்லாமல் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.