தேர்தலில் மண்ணை கவ்வினார் வாட்டாள் நாகராஜ் !

தேர்தலில் மண்ணை கவ்வினார் வாட்டாள் நாகராஜ் !
தேர்தலில் மண்ணை கவ்வினார் வாட்டாள் நாகராஜ் !

கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார். சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெறும் 5977 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்ட ரங்க ஷெட்டி 75,963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த படியாக பஜக வேட்பாளர் மல்லிகர்ஜுனப்பா 71,050 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகள் மட்டுமே பெற்று 5வது இடம் பிடித்தார். 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், மஜத 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com