வருண்காந்தி பார்வை தேசவிரோதமானது: மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ்

வருண்காந்தி பார்வை தேசவிரோதமானது: மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ்
வருண்காந்தி பார்வை தேசவிரோதமானது: மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ்
Published on

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் வருண்காந்தியின் பார்வை தேச விரோதமானது என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். 

மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறை மற்றும் வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகளாக வங்கதேசம் சென்றனர். அதேபோல், இந்தியாவிற்குள்ளும் சுமார் 40 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியாவிற்குள் நுழைந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகவும், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில், ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் யாரையும் வெளியேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. தலைவரும் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி கருத்து தெரிவித்தார். இந்நிலையில் வருண்காந்தியின் கருத்து நாட்டின் நலனுக்கு எதிரானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com