\
வந்தவாசி: அதிமுக சார்பில் மகள்.. சுயேட்சையாக போட்டியிடும் தாய் - ஒரே வார்டில் மோதல்!

வந்தவாசி: அதிமுக சார்பில் மகள்.. சுயேட்சையாக போட்டியிடும் தாய் - ஒரே வார்டில் மோதல்!

வந்தவாசி: அதிமுக சார்பில் மகள்.. சுயேட்சையாக போட்டியிடும் தாய் - ஒரே வார்டில் மோதல்!
Published on

வந்தவாசி நகர்மன்றத் தேர்தலில் ஒரே வார்டில் தாயும் மகளும் எதிர் எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் நகரமன்ற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 18வது வார்டில் அதிமுக சார்பில் பிரியா தினகரன் என்பவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு போட்டியாக அதிமுக வேட்பாளரின் தாய் கோட்டீஸ்வரி நித்தியானந்தம் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தாயும் மகளும் ஒரே வார்டில் எதிர் எதிராக வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com