பொதுமக்களுடன் பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்

பொதுமக்களுடன் பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்
பொதுமக்களுடன் பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பந்தய சாலை பகுதியில் பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று காலை பந்தய சாலை பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய வானதி சீனிவாசன், தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பந்தயச் சாலையில் வாக்கிங் சென்றவர்களுடன் பேசிய வானதி சீனிவாசன் அவர்களிடம் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கிருந்த விளையாட்டு திடலில் பொதுமக்களுடன் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடிய வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com