ஆரம்பமானது காதலர்தின கொண்டாட்டம்! இவருக்குள்ளேயும் ஒரு ஷங்கர் இருக்கிறார் பாரேன்! - வீடியோ

காதல் என்றால் ஆண் பெண் இருவரும் ஒருவர்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது மட்டும் காதல் அல்ல.... நமக்கு எது பிடிக்குமோ அதை பைத்தியகாரத்தனமாக செய்வதும் காதல்தான்.
காதலர் தின கொண்டாட்டம்
காதலர் தின கொண்டாட்டம்டிவிட்டர்

நாளை காதலர் தினம்...

காதல் என்றால் ஆண் பெண் இருவரும் ஒருவர்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது மட்டும் காதல் அல்ல.... நமக்கு எது பிடிக்குமோ அதை பைத்தியகாரத்தனமாக செய்வதும் காதல்தான். காதலுக்கென்று வயது கிடையாது, பருவம் கிடையாது. ஆண் பெண், ஏழை பணக்காரர் என்று எல்லா பருவத்தினரிடையும் காதல் என்பது இருக்கும்.

சிலருக்கு சினிமா பிடிக்கும், சிலருக்கு பாட்டு பிடிக்கும், சிலர் புத்தகம் படிப்பதை விரும்புவர், சிலர் லாங் டிரைவ் போவதை விரும்புவர், இன்னும் சிலர் ஏதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை விரும்புவர். அப்படி அவரவர்களின் விருப்பத்தைக்கொண்டே அவர்களின் காதல் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இங்கு அதே போல் வெளிநாட்டில் மாடுமேய்க்கும் ஒருவர் காதலர்தினத்தை கொண்டாடும் விதமாக தனது மாட்டின் மீது ஒவிய படைப்பாற்றலை நிரூபித்து இருக்கிறார். மாட்டின் முன்னங்காலில் ஒரு அழகான பெண் உருவத்தை வரைந்தும், மாட்டின் பின்னங்காலில் ஒர் ஆண் அந்த பெண்ணிடம் தன் காதலை தெரிவிப்பது போல வரைந்து அசத்தியுள்ளார். இதை பதிவிட்டவர், அவரை டைரக்டர் ஷங்கராக பார்த்துள்ளார். இந்த படம் X வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com