\
தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும்: வைத்தியலிங்கம்

தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும்: வைத்தியலிங்கம்

தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும்: வைத்தியலிங்கம்
Published on: 

அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுக்குழுவில் 98 சதவிகிதம் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக கூறினார். அவர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அங்கீகாரம் செய்யப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார். தங்கள் அணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் மனு தாக்கல் செய்தாலும், பொதுக்குழுக் கூட்ட வீடியோவை தாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்பதால், தங்களுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com