\
நாளை நடைபெறும் திமுக அறப்போராட்டத்தில் மதிமுக தோழர்கள் பங்கேற்க வேண்டும்: வைகோ

நாளை நடைபெறும் திமுக அறப்போராட்டத்தில் மதிமுக தோழர்கள் பங்கேற்க வேண்டும்: வைகோ

நாளை நடைபெறும் திமுக அறப்போராட்டத்தில் மதிமுக தோழர்கள் பங்கேற்க வேண்டும்: வைகோ
Published on

தமிழக அரசு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி திமுக தலைமையில் நடைபெறும் அறப்போராட்டத்தில் மதிமுக தோழர்கள் பங்கு பெறுமாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 10ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்பதரை லட்சம் மாணவர்கள் மற்றும் 3 லட்சம் மாணவர்கள் உயிரோடு விலையாட வேண்டாம் என தெரிவித்துள்ளார். தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

எனவே 15-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி திமுக தலைமையில் நாளை நடைபெறும் அறப்போராட்டத்தில் மதிமுக தோழர்கள் கருப்புக் கொடிகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்குமாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com