வார்டு எல்லை வரைவுப்பட்டியல் குறித்து கருத்து கூற கால அவகாசம் தேவை: வைகோ கோரிக்கை

வார்டு எல்லை வரைவுப்பட்டியல் குறித்து கருத்து கூற கால அவகாசம் தேவை: வைகோ கோரிக்கை

வார்டு எல்லை வரைவுப்பட்டியல் குறித்து கருத்து கூற கால அவகாசம் தேவை: வைகோ கோரிக்கை
Published on

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு எல்லை வரைவுப்பட்டியல் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

2011‌ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான வார்டு எல்லைகளின் வரைவுப்பட்டியல் 28-ஆம் தேதி அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் வெளியிடப்பட்டது. இந்த வரைவுப்பட்டியலில் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் வ‌ரும் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மிக நீண்டகால இடைவெளியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவுப்பட்டியல் குறித்து கருத்து தெரிவிக்க, இரண்டு நாட்கள் பொது விடுமுறையை கூட கவனத்தில் கொள்ளாமல் ஐந்து நாட்கள் ஒதுக்கியது ஏற்புடையது அல்ல என்று வைகோ தெரிவித்துள்ளார். எனவே பொங்கல் விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com