\
“மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி 

“மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி 

“மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி 
Published on

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் மாநிலங்களவைக்குச் சென்று இந்து கலாச்சாரத்தை குப்பையாக்குவார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்படுமா ? என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது. பின்னர், அவரது மனு ஏற்கட்டத்தை அடுத்து வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவையில் கால்பதிக்க உள்ளார். 

இந்நிலையில், வைகோ மாநிலங்களவை எம்.பி ஆவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டரில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும்” என்று விமர்சித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com