டிரெண்டிங்
கருணாநிதி தலைசிறந்த ராஜதந்திரி: வைகோ புகழாரம்
கருணாநிதி தலைசிறந்த ராஜதந்திரி: வைகோ புகழாரம்
திமுக தலைவர் கருணாநிதி தலைசிறந்த இலக்கியவாதி, ராஜதந்திரி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கருணாநிதியின் எழுத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதவை என பாராட்டினார். தலைசிறந்த இலக்கியவாதி கருணாநிதி. பேரறிஞர் அண்ணாவின் அருகில் இருந்தவர். தந்தை பெரியாரின் குடியரசு இதழில் பணியாற்றியவர். அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுகவைக் கட்டிக் காத்தவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், நினைவாற்றல் மிக்கவர். எதிரிகளை வார்த்தைகளால் வீழ்த்தக்கூடியவர். ’சொற்சிலம்பம்’ கருணாநிதிக்கு கைவந்த கலை என வைகோ பாராட்டு தெரிவித்தார்.