சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம் - வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம் - வைகோ கண்டனம்
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம் - வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ,சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில் “தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் பாடமும் நீக்கப்பட்டு உள்ளன.

மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன. சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும் உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பா.ஜ.க. அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com