உ.பி. இடைத்தேர்தல்: யோகி தொகுதியிலேயே பாஜகவுக்கு பின்னடைவு..!
உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் காலியான கோராக்பூர் மக்களவை தொகுதி, துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் காலியான புல்பர் தொகுதி, பீகாரில் அராரியா தொகுதி என மூன்று மக்களவை தொகுதிகளுக்கும், பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு நடைபெற்ற மூன்று மக்களவை மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், கோரக்பூரில் 15 ஆயிரம் வாக்குகள் மற்றும் புல்பரில் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கோரக்பூர் தொகுதி:-
பிரவீன் குமார் (சமாஜ்வாடி) - 2,12,061
உபேந்திர தத் சுக்லா (பாஜக) - 1,92,860
காங்கிரஸ் வேட்பாளர் - 9,259
புல்பர் தொகுதி(14 சுற்றுகள்):-
நரேந்திர பிரதாப் சிங் (சமாஜ்வாடி) - 1,80,367
கவுஷலேந்திரா (பாஜக) - 1,52,740
காங்கிரஸ் வேட்பாளர் - 8,469
பீகாரின் அராரியா மக்களவை தொகுதியில் பாஜக மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பீகாரின் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பாரதிய ஜனதா, ஜெஹனாபாத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர்.