நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட வார்டுகள் - ஓர் பார்வை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட வார்டுகள் - ஓர் பார்வை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட வார்டுகள் - ஓர் பார்வை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வேட்பாளர்களை கொண்டு சென்னையில் உள்ள 190 மற்றும் 192 வது வார்டுகளில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.அது குறித்த செய்தி தொகுப்பு

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ,உள்ள வார்டு உறுப்பினருக்கான இடங்கள் மொத்தம் 12826 இடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 12603 இடங்களுக்கு 57,778 பேர் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக சென்னையில் அதிக வேட்பாளர்களை கொண்ட வார்டு 190 மற்றும் 192 வது வார்டுகளில் 24 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த வேட்பாளர்கள் கொண்ட வார்டு 17, 28 மற்றும் 31 வது வார்டுகளில் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 159 வது வார்டில் 3116 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், அதிக வாக்காளர்கள் கொண்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 137 வது வார்டில் 58620 வாக்காளர்கள் உள்ளனர்.

நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக தமிழகத்தில் மொத்தம் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியிலும், 1.33 லட்சம் அரசு பணியாளர்கள் தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com