சென்னையில் 15வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்

சென்னையில் 15வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்
சென்னையில் 15வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்

சென்னையில் 15 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சில மையங்களில் நிகழ்ந்த அசம்பாவிதம் காரணமாக வாக்குப்பதிவு மையத்திலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு பெட்டிகளை கொண்டும் செல்லும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் வாக்கு பெட்டிகளை வாக்கு மையங்களில் அடுக்கும் பணி நடைபெற்றது. பின்னர் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒவ்வொரு அறையிலும் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com