தீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச்சமில்லாமல் லாவகமாக அணைத்த காவலர் - வீடியோ

தீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச்சமில்லாமல் லாவகமாக அணைத்த காவலர் - வீடியோ
தீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச்சமில்லாமல் லாவகமாக அணைத்த காவலர் - வீடியோ

உத்திர பிரதேச மாநிலத்தின் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென சிலிண்டரில் தீ பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர் விரைவாகச் செயல்பட்டு தனது சமயோசித புத்தியினை பயன்படுத்தி தீயினை அணைத்ததோடு பெரிய விபத்தினையும் தடுத்துள்ளார்.

அதனை அங்கிருந்தவர்கள் செல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோவை நெட்டீசன்கள் வைரலாக்கி வருவதோடு காவலரின் வீரதீர செயலையும் பாராட்டி வருகின்றனர். 

அந்த வீடியோவில் இருக்கின்ற காவலர் யோகேந்திர ரதி என தெரியவந்துள்ளது. மிக துரிதமாகச் செயல்பட்ட அவர் தனது லத்தியை பயன்படுத்தி சமையலறையின் சிலாப் மீது எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை கீழே இறக்கி வைத்தார். 

பின்னர் அந்த வீட்டின் தரையில் கிடந்த தடிமனான கால்மிதியை தண்ணீரில் நனைத்துப் பற்றி எறிந்த சிலிண்டர் மீது சுற்றி தீயை அணைத்துள்ளார். பற்றி எரிந்த தீயானது உடனடியாக கட்டுக்குள் வந்துவிட்டது. அவரது செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com