மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை
Published on

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் தனது கணவருடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கடந்த 2014 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார் ஸ்மிருதி. ராகுல் காந்தியிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வி அடைந்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பியான அவர், மத்திய அமைச்சர் ஆனார். 

இப்போது அவர் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஐந்தாம் கட்டமாக, மே 6 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார் ஸ்மிருதி. ஆனால், அன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறை. இதையடுத்து  அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.

அதற்கு முன்னதாக, இன்று காலை தனது கணவர் ஜூபின் இரானியுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளார். பின் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் செல்ல இருக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதியில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com