பாஜக அரசை விமர்சித்த நடிகரும் எம்பியுமான சத்ருகன் சின்ஹாவின் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் 182 பேர் கொண்ட முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா டெல்லியில் வெளியிட்டார். அதில் வாரணாசியில் மோடியும், காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் 36 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநிலத்திற்கான பாரதிய ஜனதா மாநிலப் பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். அதில், பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த நடிகரும் எம்பியுமான சத்ருகன் சின்ஹாவின் பாட்னா சாகிப் தொகுதியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் பாஜகவும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இதில் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிரங் பாஸ்வானுக்கு ஜாமுய் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.