காவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்
காவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “ரஜினியின் ஆன்மீக அரசியல் காவி அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படி இருந்தால் அவருடன் கூட்டணி இல்லை” என்று கூறினார்.
இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “காவி என்பது ஒரு நிறம். சுயநலம் இல்லாதவர்கள் ஏற்றுக்கொண்டதுதான் காவி. கமல் காவிக்கு மாறமாட்டேன் என்பது சுயநலம். காவியை கொச்சைப் படுத்தவேண்டாம்” என்றார்.
இதனிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத் திறப்பு சர்ச்சை குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜெயலலிதா படத் திறப்பில் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை முதல்வராகதான் பார்க்க வேண்டும். விமர்சனங்கள் தேவை இல்லை என்பது எனது கருத்து. ஜெயலலிதா படத் திறப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறது” என்றார்.