தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட்

தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட்

தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட்
Published on

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது சாத்தியம் இல்லாதது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த தலைவர்களும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதில், முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாக கருதவில்லை என்று முதலில் மன்மோகன் சிங் தெளிவு படுத்தி விடுகிறார். பின்னர், பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் வரும் 2020-இல் இரட்டிப்பாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது குறித்து கூறுகையில், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த இயலாது என்று தெரிவித்தார். 

"விவசாய பாதிப்பை சமாளிக்க எந்த மாதிரியான யுத்தி கையாளப்படுகிறது. விவசாயிகளுக்கான வருமானம் எப்படி இரட்டிப்பாகும். இந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும்" என்று மன்மோகன் சிங் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அரசின் வருவாய் குறித்து தவறான கணக்குகளை கூறுகிறார்களோ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். சீர்திருத்தங்கள் கொண்ட பட்ஜெட் என்பது தவறான கருத்து என்று மன்மோகன் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com