\
வைகோவுக்கு 2 பாதுகாவலர்கள்... ஐநா நியமித்தது

வைகோவுக்கு 2 பாதுகாவலர்கள்... ஐநா நியமித்தது

வைகோவுக்கு 2 பாதுகாவலர்கள்... ஐநா நியமித்தது
Published on

வைகோவுக்கு ஐநா இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக் கூட்டம் ஜெனிவா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வைகோ உள்ளிட்ட பல நபா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடா்பாக குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும், ஐ.நா. சபையின் பொது மேலாளா் இலங்கையில் நேரில் ஆய்வு செய்து பொது வாக்கெடுப்பிற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

இதனையடுத்து, ஜெனீவாவில் சிங்களர்கள் சிலர் தம்மை சூழ்ந்து மிரட்டும் வகையில் பேசியதாக வைகோ குற்றம்சாட்டி இருந்தார். வைகோ மீதான அச்சுறுத்தலுக்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், வைகோவின் பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை ஐ.நா நியமனம் செய்துள்ளது. தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com