நீண்ட முடி.. களத்தில் அம்பயராக அசத்தும் ஒரு "ராக் ஸ்டார்" !

நீண்ட முடி.. களத்தில் அம்பயராக அசத்தும் ஒரு "ராக் ஸ்டார்" !

நீண்ட முடி.. களத்தில் அம்பயராக அசத்தும் ஒரு "ராக் ஸ்டார்" !
Published on

ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் தன்னுடைய நீண்ட முடியால் கவனம் ஈர்த்துள்ளார் அம்பயர் ஒருவர். அவரின் பெயர் பாஷிம் பதக்.

ஏற்கெனவே கடந்தவாரம் நடைபெற்ற கொல்கத்தா - ஹைதராபாத் இடையிலான போட்டியில் பாஷிம் பதக் தன்னுடைய நீண்ட முடியால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் இப்போது நடைபெற்று வரும் கொல்கத்தா - டெல்லி இடையிலான போட்டியிலும் பாஷிம் பதக் தன்னுடைய ராக் ஸ்டார் ஸ்டைலால் கவனம் பெற்று வருகிறார்.

மும்பையை சேர்ந்த பாஷிம் பதக் உள்ளூர் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். அப்போதே போட்டியின் போது ஹெல்மெட் அணிந்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர். போட்டிகளின் போது அம்பயர்களுக்கு காயம் ஏற்பாடமல் தடுப்பதற்காவே அவர் ஹெல்மெட் அணிந்து செயல்பட்டதாக கூறி முன்பு வைரலானார்.

ஐ.பி.எல் 2020 தொடரில் நடுவராக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல் தொடரின் மிகவும் ஸ்டைலிஷ் அம்பயராக உருவெடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இவரை ராக் ஸ்டார் பாஷிம் பதக் என கூறி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com