இரட்டை தாடையை நீக்கப்போய் லண்டன் பெண்ணுக்கு கிடைத்த பல்லி போன்ற கழுத்து: நடந்தது என்ன?

இரட்டை தாடையை நீக்கப்போய் லண்டன் பெண்ணுக்கு கிடைத்த பல்லி போன்ற கழுத்து: நடந்தது என்ன?
இரட்டை தாடையை நீக்கப்போய் லண்டன் பெண்ணுக்கு கிடைத்த பல்லி போன்ற கழுத்து: நடந்தது என்ன?

உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க சில காஸ்மோ சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் பலரும் தங்களது இயற்கையான உடலமைப்புகளில் இருந்து மாறுபட்டு தங்களுக்கு தேவையான வகையில் உருவத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.

இது முதலில் வசீகரமாக இருந்தாலும் இறுதியில் தவறான முடிவையே தருகிறது. இதனால் பலரும் தங்களது முந்தைய வடிவுக்கே திரும்ப பல லட்சங்கள் கோடிகளிலும் பணத்தை செலவழிக்கிறார்கள். இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இதுப்போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் பல இடங்களில் நடைபெறுகிறது.

அந்த வகையில் 59 வயதான லண்டனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது இரட்டை தாடையை குறைக்க மேற்கொண்ட சிகிச்சையால் தற்போது பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.

Jayne Bowman என்ற பெண் ஒருவர் அறுவை சிகிச்சை அல்லாத Fibroplast plasma என்ற தோலை இறுகச்செயும் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். இதன் முடிவில் அவரது இரட்டை தாடை குறைவதற்கு பதிலாக பல்லியின் கழுத்தை போன்று சிவப்பு நிற புள்ளிகளை கொண்ட கழுத்தையே அப்பெண் பெற்றிருக்கிறார்.

இது ஏன் எப்படி நடந்தது என்பதை காணலாம்:

ஜேன் முதலில் தனது எடையை குறைத்ததன் காரணமாக அவருக்கு இரட்டை தாடை பெரிதாக இருந்திருக்கிறது. இதனை சரிசெய்ய முயற்சித்த போது ஃபேஸ்புக் மூலம் பியூட்டிஷியனை தொடர்பு கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஜேன், டபுள் சின் நீக்க சிகிச்சையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக டெய்லி மெயில் தளத்திடம் பேசியுள்ள ஜேன், “சிகிச்சை முடிந்த ஒரு வாரங்களுக்கு என் கழுத்தில் இருக்கும் சிவப்பு புள்ளிகளை தவிர வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. புருவங்களில் இருக்கும் புள்ளிகளை போல என்னுடைய உடலில் நூற்றுக்கணக்கான புள்ளிகள் உள்ளது. இது பார்ப்பதற்கு பல்லியைபோல இருக்கிறது.

இதனால் என்னால் வெளியே கூட செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும் துணியை கொண்டு மறைத்தபடியே செல்ல வேண்டியுள்ளது. இப்படி இருப்பதற்கு முன்பிருந்ததைபோல தொங்கலான தாடை இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. இந்த புள்ளிகளோடு இருப்பதற்கு அந்த இரட்டை தாடையே இருந்திருக்கலாம். இந்த சிகிச்சையால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.

இது ரொம்ப வலியை கொடுக்கிறது. நெருப்பை எடுத்து மேலே போட்டுக்கொண்டது போல் இருக்கிறது. இது பற்றி சிகிச்சை கொடுத்தவரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.” என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

Fibroplast plasma சிகிச்சைக்காக 500 யூரோ அதாவது 40,591 ரூபாய் செலவழித்திருக்கிறாராம் ஜேன். தனக்கு தவறான சிகிச்சை அளித்த பியூட்டிஷியன் மீது புகாரளிக்க தனது வழக்கறிஞருடன் பேசியிருந்த நிலையில், அந்த பியூட்டிஷியன் ஜேன் மீது பதிலுக்கு புகார் அளித்திருக்கிறார் என டெய்லி மெயில் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com