கல்லறைகளை பார்வையிடுவதுதான் இவரின் வேலையே.. அதுவும் 1.5 கோடி செலவில்.. ஏன் தெரியுமா?

கல்லறைகளை பார்வையிடுவதுதான் இவரின் வேலையே.. அதுவும் 1.5 கோடி செலவில்.. ஏன் தெரியுமா?
கல்லறைகளை பார்வையிடுவதுதான் இவரின் வேலையே.. அதுவும் 1.5 கோடி செலவில்.. ஏன் தெரியுமா?

ஒவ்வொரு தனி நபர்களுக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் இருக்கும். அந்த பழக்க வழக்கங்கள் ஒழுக்கமாகவும் இருக்கும், சில பழக்கங்கள் விசித்திரமாகவும் உலகுக்கு புதியதாகவும் இருக்கும்.

அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஷூக்களின் இடுக்குகளில் சிக்கும் கற்களை சேமிப்பதை பழக்கமாக கொண்டிருப்பார். அதேபோல, தனது காதலர் அவரது காதில் உள்ள மெழுகை சாப்பிடும் விநோதமான பழக்கத்தை கொண்டிருப்பதாக mumsnet தளத்தில் காதலி ஒருவர் குறிப்பிட்டிருப்பார்.

இப்படியான பல விநோதமான விசித்திரமான பழக்கங்கள் கொண்டோர் நம்மை சுற்றியுமே இருக்கலாம். அந்த வகையில், உலகில் உள்ள பிரபலங்களின் கல்லறைகளை தேடித்தேடிச் சென்று பார்வையிடும் நூதன பழக்கத்தைக் கொண்டிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர்.

இதுலாம் ஒரு ஹாபிட்டா என கேட்கத் தோன்றலாம். ஆனால் இதற்காகவே சுமார் 1 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 944 ரூபாய் செலவிட்டிருக்கிறார் என்றால் இப்படிலாமா இருப்பார்கள் என்றே எண்ணவைக்கும்.

அதன்படி, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டப்ஸ். இவர் கிட்டத்தட்ட 700 கல்லறைகளுக்கும் மேல் பார்வையிட்டிருக்கிறாராம். அதில் சீனாவில் உள்ள ப்ரூஸ் லீயின் கல்லறை, வாஷிங்டன் DCயில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, லாஸ் ஏஞ்செலஸில் உள்ள மர்லின் மண்ட்ரோவின் கல்லறைகளுக்கு மார்க் டப்ஸ் சென்றிருக்கிறார்.

கல்லறைகளை தேடிச் சென்று பார்வையிடுவதன் நோக்கம் என்ன என்று 49 வயதான மார்க் டப்ஸிடம் கேட்டபோது, பள்ளி காலத்தில் இதுப்போன்ற வரலாறுகளை கற்றுக் கொள்ளாததால் இந்த பயணங்கள் தனக்கு பாடமாக அமைகிறது எனக் கூறியிருக்கிறார். மேலும் கல்லறைகளை பார்வையிடுவதில் எந்த நோக்கமும் இல்லை என்றும், இதனை நிறுத்தும் எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெய்லி ஸ்டார் தளத்திடம் பேசியிருந்த மார்க் டப்ஸ், இந்த பயணங்களின் போது சில சமயங்களில் எதிர்ப்பார்க்காத சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்றும், அடக்கம் செய்யப்படாத மூன்று பிரதமர்களை தவிர்த்து மற்ற அனைத்து பிரதமர்களின் கல்லறைகளுக்கும் சென்றிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், “வரலாறும், நடப்பு நிகழ்வுகளும் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. மீண்டும் மாஸ்கோவிற்கு சென்று ஜோசப் ஸ்டாலினின் கல்லறையை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” எனவும் கூறியுள்ளார்.

மார்க் டப்ஸ் இதுவரை சென்று பார்வையிட்ட கல்லறைகளில் இடம்பெற்ற உலக பிரபலங்கள் 25 பேரின் பட்டியல் இதோ:

1) Bruce Lee - Seattle

2) Leon Trotsky - Mexico City

3) John F Kennedy -Virginia

4) Mao Tse-Tung - Beijing

5) Beethoven - Vienna

6) Chopin- Paris

7) Winston Churchill - Bladon, Oxfordshire

8) Martin Luther King - Atlanta, Georgia

9) Benny Hill - Southampton

10) Carmen Miranda - Brazil

11) Lee Harvey Oswald - Fort Worth, Texas

12) Lord North - Oxfordshire

13) Charlie Chaplain - Switzerland

14) Edith Piaf - France

15) Jim Morrison, Georgia, U.S

16) Calamity Jane - Arizona

17) Archduke Franz Ferdinand - Austria

18) Johnny Ramone - Los Angeles

19) Karl Marx - Highgate London

20) Jeremy Beadle - Highgate London

21) Napoleon Bonaparte - Paris

22) Jane Austen - Winchester

23) Grover Cleveland - Princeton, U.S

24) Alexander Dub?ek - Prague

25) Buffalo Bill - North Dakota

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com