வாயுவை வெளியிட்டதற்காக 34 மாதம் சிறைத்தண்டனையா? லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஏன்?

வாயுவை வெளியிட்டதற்காக 34 மாதம் சிறைத்தண்டனையா? லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஏன்?
வாயுவை வெளியிட்டதற்காக 34 மாதம் சிறைத்தண்டனையா? லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஏன்?

கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறையில் ஈடுபடுவது இவையெல்லாம்தான் பொதுவாக அறியப்படும் பெரிய குற்றமாக இருக்கும். ஆனால் ஒருவர் தனது உடலில் இருந்து வாயுவை வெளியிட்டது அத்தனை பெரிய குற்றமா என்ன?

ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியின் முகத்தில் வாயுவை வெளியேற்றினால் அது பெரிய குற்றமாகத்தானே கருதப்படும். இப்படியான சம்பவம்தான் இங்கிலாந்து நாட்டில் அரங்கேறியிருக்கிறது.

லண்டனின் மெட்ரோ செய்தித் தளத்தின் கூற்றுப்படி மேத்யூ ஹாப்கூட் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிரபல பிரிட்டிஷ் சூப்பர் மார்க்கெட்டான டெஸ்கோவில் இருந்து 33 பவுண்ட் மதிப்புள்ள (₹3075) பீர் பாட்டிலையும், சைடரையும் திருடியிருக்கிறார். மேலும் கெரேஜிலிருந்தும் சில பொருட்களை கொள்ளையடித்திருக்கிறார்.

இது தொடர்பான புகார் எழுந்ததை அடுத்து மேத்யூவை கைது செய்ய போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாரின் முகத்திற்கு நேராக வேண்டுமென்றே மேத்யூ வாயுவை வெளியிட்டிருக்கிறாராம்.

இதனையடுத்து ஆக்ஸ்போர்டு கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது திருடியது உள்ளிட்ட குற்றங்களை மேத்யூ ஒப்புக்கொண்டிருக்கிறார். விசாரணையின் போது மேத்யூ ஹாப்கூட்டிற்கு 34 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி இயான் ப்ரிங்கிள்.

மேத்யூவிற்கான தீர்ப்பு வழங்கும்போது, “ஏற்கெனவே செய்த 83 குற்றங்களுக்கு 31 நீண்ட தண்டனைகளுக்கு குறையாமல் இருக்கிறது உங்களுடைய க்ரைம் வரலாறு. இவை அனைத்தும் உண்மையில் உங்கள் வயது வந்த வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு உங்களுடன் இருந்த போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் போதைக்கு தொடர்புடையவையாக இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com