15 நிமிஷ ட்ரிப்புக்கு 32 லட்சம் வசூலா? எந்த ஊர் நியாயம்? uber பில்லால் ஆடிப்போன வாலிபர்!

15 நிமிஷ ட்ரிப்புக்கு 32 லட்சம் வசூலா? எந்த ஊர் நியாயம்? uber பில்லால் ஆடிப்போன வாலிபர்!
15 நிமிஷ ட்ரிப்புக்கு 32 லட்சம் வசூலா? எந்த ஊர் நியாயம்? uber பில்லால் ஆடிப்போன வாலிபர்!

தனியார் கேப் அல்லது டாக்சியில் செல்வதென்பது உலகின் பல பகுதிகளிலும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. குறைந்த அளவிலான கட்டணத்துடன் கேப் சேவை வழங்கப்படுவதால் பலரும் அதையே பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்த கேப் சேவையில் டிரைவர், வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்திற்கிடையே என பல்வேறு வகையான குளறுபடிகளும் கூடவே எழுந்துவருவதும் வாடிக்கையாகி இருக்கிறது.

அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் 15 நிமிடம் உபெர் கேபில் சென்றதற்காக 35 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஆலிவர் காப்லன் என்ற 22 வயதான அந்த இளைஞர் நான்கு மைல் தொலைவில் உள்ள டேம்சைடின் ஆஸ்டன் பகுதிக்கு செல்ல உபெர் செயலி மூலம் கேப் புக் செய்திருக்கிறார். 10 பவுண்ட் (₹918) தான் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆலிவருக்கு வந்த உபெர் டிரைவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு அருகில் 10,000 மைல் தொலைவில் அதே பெயரில் டேம்சைடில் உள்ள நகரம் என கார் டிரைவர் குழம்பியிருக்கிறார் போலும். இதனால் 10 முதல் 11 பவுண்ட் மட்டுமே செலவாக வேண்டிய ஆலிவருக்கு 35,427.97 பவுண்ட் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் 32 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயாகும்.

நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த ஆலிவர் மறுநாள் காலை தூக்க கலக்கத்தில் எழுந்து ஃபோனை பார்த்தபோது தனது டெபிட் கட்டணத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். இது தொடர்பாக தி சன் இதழுக்கு பேசியுள்ள ஆலிவர் காப்லன், “நான் புக் செய்திருந்த கேப் டிரைவர் சரியாக எங்கே இறங்க வேண்டுமோ அங்கேதான் இறக்கிவிட்டார். வெறும் 15 நிமிடம்தான் அந்த ட்ரிப்புக்கு செலவானது. அதற்கான பில்லும் 10 முதல் 11 பவுண்ட்தான் இருந்தது.

ஆனால் தூங்கி எழுந்த பிறகு ஃபோனை பார்த்தப்போது என்னுடைய வங்கி கணக்கில் இருந்து 35,000 பவுண்ட் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் அதற்கான போதுமான பணம் இல்லாததால் என்னுடைய அக்கவுண்ட்டில் இருப்பு மைனஸில் இருந்திருக்கிறது. ஒருவேளை முழு பணமும் இருந்திருந்தால் ரிஃபண்டுக்காக நான் அலைக்கழிக்கப்பட்டிருப்பேன்.

இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளியிருக்கும். இருப்பினும், இந்த மிகப்பெரிய தவறை உணர்ந்த உபெர் நிறுவனம் என்னுடைய ரைட் கட்டணத்தை 10.73 பவுண்டாக மாற்றியமைத்த பிறகுதான் நிம்மதியடைந்தேன்” எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பான உபெரின் விளக்கத்தில் “நடந்த அசவுகரியத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com