WFP இருக்கும்போது இனி WFH எதற்கு? - ஊழியர்களை குதூகலப்படுத்திய UK பார்கள்.. பின்னணி என்ன?

WFP இருக்கும்போது இனி WFH எதற்கு? - ஊழியர்களை குதூகலப்படுத்திய UK பார்கள்.. பின்னணி என்ன?
WFP இருக்கும்போது இனி WFH எதற்கு? - ஊழியர்களை குதூகலப்படுத்திய UK பார்கள்.. பின்னணி என்ன?

கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் உலகெங்கும் வீட்டில் இருந்தே பணியாற்றும் work from home முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இந்த WFH முறை ஊழியர்களுக்கு சமயங்களில் கடுப்பையே கொடுத்திருந்தது.

ஏனெனில் வீட்டில் இன்டெர்நெட், லேப்டாப், கம்ப்யூட்டர் என பல தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தது. இருப்பினும் காலப்போக்கில் பலருக்கும் வீட்டில் இருந்தே வேலை செய்வது ஒத்துப்போனதால் கொரோனாவுக்கு வாழ பழகுவதுபோல WFHக்கும் முழுவதுமாக பழகிக் கொண்டார்கள். இது ஒரு வகையில் நிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியில் செலவை குறைத்துள்ளதால் போனஸ் பாயின்ட் ஆகிவிட்டது.

அதே வேளையில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் எல்லாரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விடுவதால் ஹோட்டல், ரெஸ்டாரென்ட் , பார் போன்றவற்றுக்கு விசிட் அடிப்பதும் குறைவாகியிருக்கிறது. பல வெளிநாடுகளில் இதுதான் நிலைமையாக இருக்கிறது.

அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் உள்ள pub-கள் இந்த குறையை நீக்குவதற்காக புதிய நடைமுறையை கையாண்டிருக்கிறது. அதன்படி, work from home என்பதற்கு பதிலாக work from pub என்ற ஐடியாவை பிரிட்டனில் உள்ள பல பப்-கள் அறிமுகம் செய்துள்ளன.

இதனை ஒரு பேக்கேஜாகவும் பிரிட்டன் pubs கொண்டு வந்திருக்கிறது. அதில் wi-fi, சார்ஜிங் போர்ட், சாப்பாடு, ட்ரிங்க்ஸ் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் work from pub செட்-அப் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

தி கார்டியனின் செய்திப்படி, பிரிட்டனில் உள்ள 380 pub-கள் இந்த முறையை நடைமுறைப்படுத்தியிருக்கிறதாம். இதற்காக ஒரு நாளைக்கு 10 பவுண்ட் அதாவது 900 ரூபாய் என கட்டணமும் வசூலிக்கிறார்களாம். இந்த கட்டண விவரம் பப்பிற்கு பப் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த work from pub முறைக்கு பல ஊழியர்களும் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்றும், லூக் மெக்மில்லன் என்ற WFP கஸ்டமர் ஒருவர், “இந்த பப் அட்மாஸ்பியர் ரொம்பவே நல்லா இருக்கு. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பப் ஊழியரிடம் நட்பாக பழகினால் கூடுதலாக பீரும் கிடைக்கும்” என்று கூறியதாக தி கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com