
உடுமலையில் முறையான ஆவணங்கள் இன்றி கோவைக்கு கொண்டு சென்ற தனியார் வங்கி வாகனத்தில் ரூ. 1கோடியே 25 லட்சம் பணம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதல் பறக்கும் படை அதிகாரி பிரியங்கா தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலையில் வந்த தனியார் வங்கி வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில், ரூ. 1 கோடியே 25 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் இதற்கு முறையான ஆவணங்கள் இருக்கிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது உரிய ஆவணங்களை காண்பிக்காததால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் வட்டாச்சியர் ராமலிங்கம் கூறும்போது, “தனியார் வங்கியில் இருந்து கோவையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தெரிகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது” என்றார்.