\
பொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின் 

பொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின் 

பொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின் 
Published on: 

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 40 ஆம் ஆண்டின் துவக்க நாள் இன்று. இதையொட்டி, சமீபத்தில் இளைஞரணி தலைவராக பொறுபேற்ற உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு. எனக்கு கிடைத்த பொறுப்பு ஒருபக்கம் பெருமையாகவும் மறுபக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. 

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றது. மனதை திடப்படுத்துபவை. செயல்பாட்டின் மூலம் விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம். யாராலும் எளிதில் அசைக்க முடியாத திமுகவை பார்த்தால் பலருக்கும் வயிற்றெரிச்சல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com