“அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்” - உதயநிதி பரப்புரை

“அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்” - உதயநிதி பரப்புரை

“அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்” - உதயநிதி பரப்புரை
Published on

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி நாடளுமன்றத்தொகுதியில் வேட்பாளர் கனிமொழி பரப்புரையை தொடங்கியுள்ளார். அங்கு பேசிய கனிமொழி பாஜகவையும் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின்னர் சைதாப்பேட்டை பகுதியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய உதயநிதி “என்னுடைய அக்கா தமிழச்சி. அவரும் என்னை தம்பி என்றே பாசத்துடன் அழைப்பார். இது இப்போது அல்ல. மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வரும் நட்பு. உண்மையாகவே தலைவர் கருணாநிதி மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த பாசமும் நட்பும் வைத்திருப்பவர். அந்த நட்பே அவருக்கு வெற்றியை பெற்றுத்தரும் என நம்புகிறேன்.  தென்சென்னை மக்களை கேட்டுக்கொள்வது இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நான் அழகு என்று கூறியது அவரது தோற்றத்தை வைத்து மட்டுமல்ல. அவரது அழகு தமிழ், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரது கொள்கை, திமுகவின் மீது கொண்டுள்ள கொள்கை பிடிப்பு ஆகியவற்றை வைத்து தான் சொன்னேன்.” எனப் பேசினார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com