“நாங்குநேரியை கொடுத்தால் நாங்கள் ஈசியாக ஜெயிப்போம்” - உதயநிதி

“நாங்குநேரியை கொடுத்தால் நாங்கள் ஈசியாக ஜெயிப்போம்” - உதயநிதி

“நாங்குநேரியை கொடுத்தால் நாங்கள் ஈசியாக ஜெயிப்போம்” - உதயநிதி
Published on

நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாக்குமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கியது. அதில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை போட்டியிட்டு பொன்.ராதாகிருஷ்ணனிடம் தோல்வியுற்ற வசந்தகுமார் மீண்டும் நிறுத்தப்பட்டார். இந்த முறை வசந்த குமார் அபார வெற்றி பெற்றார். 

இதனால் அவர் ஏற்கனவே வகித்து வந்த நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த வசந்த குமார், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளதாகவும் அத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தல் வரவிருக்கிறது. திருநாவுக்கரசரிடம் ஒரு வேண்டுகோள். நாங்குநேரி தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் இலகுவாக ஜெயித்துவிடுவோம். இது ஒரு கோரிக்கை தான்” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com