“தமிழக போக்குவரத்து காவல்துறை ஒப்புகைச்சீட்டில் தமிழ் இல்லை” - உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறையினரால் வழங்கப்படும் அபராத ஒப்புகைச்சீட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போக்குவரத்து துறை வழங்கிய ஒப்புகைச்சீட்டு நகலை தமது ட்விட்டர் பக்கத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் காவல்துறை வழங்கிய ஒப்புகைச் சீட்டில் தமிழைக் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது பதிவில், “ மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று, போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகைசீட்டில் தமிழை காணவில்லை. ‘இந்தியே தேசியமொழி’ என அமித்ஷா பேசியபோது, ‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என்றார் முதல்வர். அந்த இருமொழி என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன்?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

