இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு?  - உதயநிதி ஸ்டாலின்

இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின்

இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின்
Published on

உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள் என தமிழக முதலமைச்சரைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அதனைத் தடுக்க தமிழக அரசும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நோயைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும், மக்களை சிரமப்படுத்த அல்ல எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முதல்வரின் கருத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், ‘இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்’ – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் தமிழக முதலமைச்சர் அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான் என பதிவிட்டுள்ளார். அத்துடன் #SaveChennai என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com