“இன்பாக்கு 18 வயசாகிருச்சு; அது அவரோட பெர்சனெல்”- உதயநிதி & கிருத்திகாவின் நச் Parenting!

“இன்பாக்கு 18 வயசாகிருச்சு; அது அவரோட பெர்சனெல்”- உதயநிதி & கிருத்திகாவின் நச் Parenting!
“இன்பாக்கு 18 வயசாகிருச்சு; அது அவரோட பெர்சனெல்”- உதயநிதி & கிருத்திகாவின் நச் Parenting!

தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி தன்னுடைய தோழியுடன் இருக்கும் சில படங்கள், வீடியோக்கள் கடந்த மாதங்களில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், பின் உதயநிதி ஸ்டாலின் என அடுத்தடுத்த வாரிசுகள் அரசியலுக்கு வந்து உயர் அதிகாரத்தில் இருப்பது குறித்த வாரிசு அரசியல் வாதம் உதயநிதியின் மகன் இன்பநிதி மீதும் பாய்ந்தது. அந்த இக்கட்டான சூழலில்தான் இன்பநிதி தன்னுடைய தோழியுடன் இருக்கும் வீடியோ வைரலாக்கப்பட்டது.

இது குறித்து பல தரப்பட்ட விமர்சனங்களும் கருத்துகளும் சொல்லப்பட்ட போது, இன்பநிதியின் தாயான இயக்குநர் கிருத்திகா உதயநிதி அப்போதே ட்விட்டரில் ஒரு பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதில் அவர், “காதலிப்பதற்கும், அது குறித்த அன்பை வெளிப்படுத்துவதற்கும் எந்த தயக்கமும் பயமும் வேண்டாம். இயற்கையை அதன் முழு தன்மையோடு புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கடந்த ஜனவரி மாதமே முட்டுக்கட்டை போடப்பட்டாலும், சமூக வலைதளங்களில் இது குறித்தாக பேச்சுகள் என்னவோ வழக்கம்போல உலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று நேர்காணல் நடத்தியிருக்கிறது.

அப்போது இன்பநிதி குறித்த விமர்சனங்களுக்கு கிருத்திகா உதயநிதி கொடுத்த பதில் குறித்தும் உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் தற்போது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, அவருக்கு பலரின் பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.

அவர் சொன்ன பதில் இதுதான் - “இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கு (இன்பநிதிக்கு) 18 வயது ஆகிவிட்டது. அவரது தோழியுடன் அவர் போட்டோ பகிர்கிறார். இது அவருடைய தனிப்பட்ட உரிமை. இதுபற்றி கேள்வி கேட்பதற்கு பெற்றோரான நாங்கள் மற்றும் அவரது தாத்தா பாட்டியை தவிர யாருக்கும் உரிமையில்லை.

அவருக்கு ஒரு அளவுக்கான சுதந்திரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதன்படி அதற்கான எல்லையில் ஒரு 18 வயது பையன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். இந்த மாதிரி குடும்பத்திலிருந்து வரும்போது சர்ச்சைகள், கேலி கிண்டல்கள் வருவது வாடிக்கையே. இதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் வாழ்க்கை வாழவே முடியாது. குறிப்பாக மற்றவர்களுக்காக நம் வாழ்க்கையை நாம் வாழ முடியாது. அந்த 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை, அவனுக்கு கொடுக்கணும். அதுக்காக அவங்க அம்மா போட்ட போஸ்ட்தான் அது” என நச் பதிலை உதயநிதி ஸ்டாலின் அளித்திருந்தார்.

இந்த பதிலை கண்டு, “தந்தையாக மிகத்தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார் உதயநிதி” என கமெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com