முன்னாள் முதல்வர் கருணாநிதி ஹாட்ரிக் வெற்றி.. திமுகவின் கோட்டையான ’சேப்பாக்கம் தொகுதி’

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஹாட்ரிக் வெற்றி.. திமுகவின் கோட்டையான ’சேப்பாக்கம் தொகுதி’
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஹாட்ரிக் வெற்றி.. திமுகவின் கோட்டையான ’சேப்பாக்கம் தொகுதி’

2007இல் சேப்பாக்கத்துடன், திருவல்லிக்கேணி பகுதிகளை இணைத்து மறுவரையறை செய்த பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் திமுகவே வெற்றிபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதால், மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி. தமிழகத்தின் சிறிய சட்டமன்ற தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியுடன் திருவல்லிக்கேணியில் பகுதிகளையும் உள்ளடக்கி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, 2007 ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பாக சேப்பாக்கம் தொகுதியில் 1996, 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் 1977 முதல் 89வரை தொடர்ந்து மூன்று முறை திமுகவை சேர்ந்த ரஹ்மான் கான் எம்.எல்.ஏவாக இருந்தார், 1989 தேர்தலில் திமுக சார்பில் அப்துல் லத்தீப்பும், 1991 இல் காங்கிரஸ் கட்சியின் ஜீனத் செரிஃப்தீன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com