இப்படியெல்லாம் சரும ஒவ்வாமை வருமா? வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

இப்படியெல்லாம் சரும ஒவ்வாமை வருமா? வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்
இப்படியெல்லாம் சரும ஒவ்வாமை வருமா? வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

பொதுவாக நம் உடலுக்கு சேராத எதிர்வினையாற்றும் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இவை பூச்சிகள், தூசி, ஒட்டுண்ணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் சில மருந்துகளால் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் உடல் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உடலுக்கு ஆபத்தான ஒன்றை சருமம் சந்திக்கும்போது நோயெதிர்ப்பு அமைப்பு அதற்கு எதிராக ஆண்டிபாடிகளை வெளியிடுகிறது. இதனால் அரிப்பு, தடிப்பு, சிவந்துபோதல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் உருவாகிறது.

கான்டாக்ட் டெர்மடிட்டிஸ்

புதிய நகை அணியும்போது அல்லது சோப்பு போன்றவற்றை பயன்படுத்தும்போது உடலில் அரிப்பு ஏற்பட்டால் அது ஒருவகை சரும ஒவ்வாமை. சோப்பு, லோஷன்களில் நிக்கல் அல்லது ஒருவகை ரசாயனம் பயன்படுத்தப்படும். இது எல்லோருடைய சருமத்துக்கும் ஒத்துப் போவதில்லை.

காற்றில் உள்ள தூசிகள் தோலில் இறங்கும்போது, ஒவ்வாமையைத் தூண்டிவிடுகிறது. இதை ‘’காற்றுவழி கான்டாக்ட் டெர்மடிட்டிஸ்'’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில நேரங்களில் சூரிய ஒளியில் அதிகநேரம் இருந்த பின்னரே எதிர்வினை ஆற்றும். இது ’’ஃபோட்டோஅலர்ஜி கான்டாக்ட் டெர்மடிட்டிஸ்’’ என்று அழைக்கப்படுகிறது. இது சன் ஸ்கிரீன், ஷேவிங் லோஷன் மற்றும் வாசனை திரவியங்களில் உள்ள வேதிப் பொருட்களால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • சிவந்து போதல்
  • வீக்கம்
  • வெடிப்பு
  • எரிச்சல்
  • கொப்புளம்
  • செதில் திட்டுகள்
  • அரிப்பு
  • சொறி/ படை

படை நோய்(Hives)

நமைச்சல், சிவப்பு தடிப்புகள் மற்றும் ஆங்காங்கே புடைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பூச்சி கடித்தல், மருந்துகள் மற்றும் உணவுளுக்கு, ஒவ்வாமை எதிர்வினைகளும் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். இவை உடனே தோன்றி சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கும் குணமாகிவிடும்.

அரிப்பு அழற்சி (Eczema)

இதை ‘’அடோபிக் டெர்மடிட்டிஸ்’’ என்று அழைக்கின்றனர். இது நீண்டகாலமாக இருக்கக்கூடிய ஒவ்வாமை. இது பொதுவாகக் குழந்தைப் பருவத்திலேயே வருகிறது. சுமார் 11% அமெரிக்கர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. அரிப்பு, சிவப்பு மற்றும் வறண்ட சருமம் இவற்றின் பொதுவான அறிகுறிகள். விலங்குகளிடமிருந்து, பொருட்களை சுத்தப்படுத்தும்போது மற்றும் தூசிகளினால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.

தோல் ஒவ்வாமையை தடுப்பது எப்படி?

ஒவ்வாமை வராமல் தடுக்க அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். எனவே மருத்துவரை முதலில் அணுகவேண்டும். நமது சருமத்திற்கு ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் ஒவ்வாமை மருந்துகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு அதனால் எதிர்வினை ஏற்படுகிறதா என்பதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

சிகிச்சை

பெரும்பாலான தோல் ஒவ்வாமைகள் தானாகவே சரியாகிவிடும்.

தளர்வான ஆடை அணியுங்கள்.

ஐஸ்கட்டி மசாஜ் அல்லது ஜில் தண்ணீரில் குளிக்கவும்.

காலமைன் லோஷன் மற்றும் ஹைட்ரோகார்டிசோன் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள்.

ஒவ்வாமை அதிகத் தொந்தரவு செய்தால் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் ஸ்டீராய்டு மருந்துகளால் விரைவில் குணமடையலாம்.

அனாபிலாக்ஸீஸ் என்ற தோல் ஒவ்வாமை உயிருக்கே ஆபத்தானது. மூச்சுத் திணறல் அல்லது மார்பு அழுத்தம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com