\
‌‌இரட்டை இலை வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

‌‌இரட்டை இலை வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

‌‌இரட்டை இலை வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Published on

தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி தரப்பிலிருந்து உரிமை கோருவதால் அது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் அன்சாரியா, கட்சியின் சட்டவிதியின் படியே டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. நவம்பர் 7 தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com