\
இரட்டை இலை யாருக்கு?: தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை

இரட்டை இலை யாருக்கு?: தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை

இரட்டை இலை யாருக்கு?: தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை
Published on


இரட்டை இலைச்சின்னத்திற்கு உரிமை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது.

முன்னதாக கடந்த 16ம் தேதி நடந்த விசாரணையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தரப்பும், டிடிவி தினகரன் தரப்பும் வாதங்களை முன்வைத்தனர். முதலமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களில் உள்ள குளறுபடிகளை சாட்சிகளுடன் நிரூபிக்கத்தயாராக இருப்பதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதிக்குப்பிறகு ஈபிஎஸ் ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை கணக்கில் கொள்ளகூடாது என்றும் வாதிடப்பட்டது. 

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் முறைகேடு இருந்திருந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கலாமே என முதலமைச்சர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பிரமாண பத்திரங்களில் கையெழுத்து குளறுபடிகள் குறித்து யாரிடமும் குறுக்கு விசாரணை நடத்த இயலாது என்றும் ஆனால் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால் அதனை விசாரிப்போம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை இந்திய சாட்சியங்கள் சட்டப்படி ஆய்வு செய்ய வேண்டும் என தினகரன் தரப்பு கோரியது. ஆனால், அது எங்கள் பணி அல்ல என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.இதன் பின் ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தரப்பு எழுத்துப்பூர்வமாக வாதங்கள் தாக்கல் செய்ய அறிவுறுத்திய தேர்தல் ஆணையம் விசாரணையை ஒத்திவைத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com