டிரெண்டிங்
இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி: கே.பி.முனுசாமி
இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி: கே.பி.முனுசாமி
இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைப்பது உறுதி என ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, தேர்தல் ஆணையம் கேட்ட அத்தனை ஆவணங்களையும் தங்கள் தரப்பு வழங்கியுள்ளது. அத்துடன் கட்சியின் முழுக்கட்டுப்பாடும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் உள்ளது. எனவே தங்கள் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பது உறுதி என்று கூறினார்.