கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திடம் லஞ்சம் : அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்

கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திடம் லஞ்சம் : அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்
கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திடம் லஞ்சம் : அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம்

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் ஒப்பந்த பணியாளர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், நோயாளிகளின் குடும்பத்தார் மற்றும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்குவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன. இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதற்கும், ஸ்டெச்சரில் அழைத்து செல்வதற்கும், பிரசவ அறைக்குள் சென்று உணவு கொடுத்துவிட்டு வருவதற்கும் மருத்துவமனை பெண் ஊழியர்கள், கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தாரிடமிருந்து ரூ.500 முதல் ரூ.700 வரை லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் லஞ்சம் வாங்கிய தனியார் ஒப்பந்த பணியாளர்களான வெண்ணிலா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் மாரியம்மாள் என்பவர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் குறித்த புகார்களை 94433 44422 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சேலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஊழல் தடுப்பு குழுவினரை தொடர்பு கொள்ள வசதியாக புகார் எண் அனைத்து பிரிவிலும் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com